தெலுங்கானா மாநிலத்தில் ,வரும் டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில். மாநிலம் முழுவதும் பல்வேறுகட்சிகள் தீவிர பிரச்சாரத்தை மேற்க்கோண்டு வருகின்றன. தெலுங்கானா சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தம்மை அடிக்க தாமே வாக்காளர்களிடம் செருப்பு வழங்கும் சுயேட்சை வேட்பாளர், அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். தெலுங்கானா மாநிலம் கொருட்லா தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக அகுலா ஹனுமந்த் போட்டியிடுகிறார்.
இவர் தற்போது வீடு, வீடாக அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது, வாக்காளர்கள் கையில் புதிய ஒற்றைச் செருப்பைக் கொடுக்கும் அவர், தாம் ஒரு எம்.எல்.ஏ.வாகி, தமது கடமையை சரிவர செய்யாமல் போனால் , தொகுதிக்கு முன்னேற்றம் ஏற்படுத்தாமல் போனால், அந்த செருப்பைக் கொண்டே பொது இடத்தில் வைத்து தம்மை அடிக்கலாம் என வாக்காளர்களிடம் உறுதியளித்து வருகிறார். அகுலா ஹனுமந்த்தின் இந்த வினோத பிரச்சாரம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
0 Comments