Tamil Sanjikai

கோவா நீச்சல் சங்க பயிற்சியாளராக இருந்த சுராஜித் கங்குலி தன்னிடம் பயிற்சி பெற்ற 15 வயது வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பய் ஏற்படுத்தியது . இதை தொடர்ந்து அவர் மீது கோவா போலீசார் கற்பழிப்பு உள்பட பல்வேறு பிரிவுகளில் அவர்மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சுராஜித் கங்குலி டெல்லியில் நேற்று கைது செய்யப்பட்டார். பின்னர், அங்கிருந்து அவர் கோவாவுக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட இருக்கிறது.

இதற்கிடையே, ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட பயிற்சியாளர் சுராஜித் கங்குலிக்கு இந்திய நீச்சல் சம்மேளனம் நேற்று தடை விதித்தது. தடை குறித்த சுற்றறிக்கையை அனைத்து மாநில நீச்சல் சங்கங்களுக்கும், இந்திய நீச்சல் சம்மேளனம் அனுப்பி இருக்கிறது.

0 Comments

Write A Comment