தாக்குதல் நடத்துவதற்காக காஷ்மீர் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் விமானங்களை இந்திய போர் விமானங்கள் விரட்டிச் சென்ற போது, பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்து. பாகிஸ்தானிடம் பிடிபட்டார் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன்.
பாகிஸ்தானில் இருந்து இன்று விடுவிக்கப்படும் இவர் ராவல்பிண்டி ராணுவ முகாமில் இருந்து லாகூருக்கு விமானத்தில் அழைத்து வரப்படுகிறார். பின்னர் லாகூரில் இருந்து சாலை மார்க்கமாக வாகா எல்லை வழியாக இந்தியா அழைத்து வரப்படுகிறார் என தெரிகிறது. ஆனால் இதுபற்றி இதுவரை எந்த அதிகாரபூர்வமான தகவழும் இல்லை.
இந்திய எல்லையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வாகா பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கபட்டு உள்ளது. பஞ்சாப் முதல்வர் அமிரீந்தர் சிங் அபிநந்தனை வரவேற்கிறார். பின்னர் மூத்த ராணுவ அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பிறகு, அவர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்படுவார்.
0 Comments