Tamil Sanjikai

பிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நிறுவனத்தைச் சேர்ந்த 21 ஆயிரம் பேருக்கு வேலை பறிபோகும் அபயாம் உருவாகியுள்ளது.

உலகச் சுற்றுலாப் பயணிகளின் முன்னோடி அறிஞரான தாமஸ் குக் மூலம், 1881 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தாமஸ் குக் நிறுவனம், 1927-ம் ஆண்டு தனது விமானப் பயணத்தை தொடங்கியது. ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து உள்ளிட்ட பல வங்கிகள் கடன் பெற்று தனது நிறுவனத்தை விரிவுபடுத்திய தாமஸ் குக் நிறுவனம், அண்மையில் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியது.

கடனை திருப்பிச்செலுத்துமாறு வங்கிகள் அழுத்தம் கொடுத்ததால், நிதி திரட்ட முடியாமல் தவித்த தாமஸ் குக் நிறுவனம், திவாலானதாக அறிவிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அந்நிறுவனத்தின் விமான போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டதால், உலகெங்கும் சென்றுள்ள ஒரு லட்சத்து 50 ஆயிரம் பயணிகள் வீடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்நிறுவனத்தில் பணியாற்றி வரும் 21 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயமும் உருவாகியுள்ளது.

0 Comments

Write A Comment