மும்பை டோங்கிரி பகுதியில் நேற்று மதியம் 4 மாடி கட்டிடம் ஓன்று திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடத்திற்குள் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
இதுபற்றி உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டிட இடிபாடுகளுக்குள் 40 பேர் வரை சிக்கியிருக்க கூடும் என்று முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.
0 Comments