Tamil Sanjikai

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்தின் பதவிக்காலம் டிசம்பர் 2-ம் தேதியோடு முடிவடைகிறது. அதைத்தொடர்ந்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோராவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். சுனில் அரோரா டிசம்பர் 2-ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்க உள்ளார்.

ராஜஸ்தானைச் சேர்ந்த சுனில் அரோரா 1980-ஆம் ஆண்டில் ஐ.ஏ.எஸ் முடித்தார். தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை, நிதித்துறை, ஜவுளித்துறை மற்றும் திட்டக் கமிஷனில் பணியாற்றியுள்ளார். இந்தியன் ஏர்லைன்ஸ் சேர்மனாகவும் 5 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி ஓய்வு தொடர்ந்து , தேர்தல் ஆணையத்தில் சேர்க்கப்பட்டார்.

ராஜஸ்தானில் வசுந்தரா ராஜேவின் முந்தைய ஆட்சிக் காலத்தின்போது, அவரது மிகவும் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக விளங்கியவர் அரோரா. இவர் 2005 முதல் 2008 வரை வசுந்தராவின் முதன்மைச் செயலாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment