சென்னையில் 9 இடங்களில் நிலத்தடி நீர் முற்றிலுமாக வறண்டு போயுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு சென்னையில் 352 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. இது கடந்த ஆண்டை வைத்து ஒப்பிடுகையில் 585 மில்லி மீட்டர் குறைவாகும். இந்நிலையில் சென்னையில் இந்த மாதம் 24 இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறித்து அரசுடன் இணைந்து மழையில்லம் அமைப்பு ஆய்வு மேற்கொண்டது.
இதில், அண்ணா நகர், சூளைமேடு, திருவல்லிக்கேணி, வடபழனி, மயிலாப்பூர் மாதவா பெருமாள் கோவில் பகுதி, அசோக் நகர், நெசப்பாக்கம், அடையார் கேன்சர் மருத்துவமனை பகுதி, அடையார் சாஸ்திரி நகர் ஆகிய 9 இடங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் வறண்டுள்ளது தெரியவந்துள்ளது.
0 Comments