மலேஷிய நிதியமைச்சகத்துடன் தொடர்புடைய நிதி நிறுவனம் க்ராடில் ஃபண்ட் ((Cradle Fund)) இதன் தலைமைச் செயலதிகாரியாக இருந்த நசீர் ஹுசேன். இவர் கடந்த ஆண்டு உயிரிழந்தார். அவர் உறங்கிக் கொண்டிருந்த போது தலைக்கு அருகில் இருந்த செல்ஃபொன் வெடித்ததால் வெளிப்பட்ட புகையின் காரணமாக மூச்சுத் திணறாலும், வெடித்து சிதறிய செல்ஃபோன் பாகங்கள் தலைப் பகுதியில் குத்தியதாலும் உயிரிழப்பு நேரிட்டதாக தொடக்கத்தில் கூறப்பட்டது. ஆனால், அவரது தலை, படுக்கை, செல்ஃபோன் உள்ளிட்டவற்றில் எரிபொருள் படிமம் தொடர்பான தடயங்கள் தெரிவந்ததையடுத்து அது கொலை வழக்காக மாற்றப்பட்டது.
இந்த கொலை வழக்கில், அவரது மனைவி மற்றும் மனைவியின் முன்னாள் கணவனுக்குப் பிறந்த இரண்டு மகன்களைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments