சென்னை பூங்கா ரயில் நிலையம் அருகே தண்டாவளத்தில் கல்லை வைத்து மின்சார ரயிலைக் கவிழ்க்க சதி செய்தவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை கோட்டை - பூங்கா ரயில் நிலையம் இடையே மின்சார ரயில் சென்று கொண்டிருந்த போது, சற்று தொலைவில் தண்டவாளத்தில் கல் ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த எஞ்சின் ஓட்டுநர், உடனடியாக அந்த ரயிலை நிறுத்தினார். இதனால் எந்த விபரீதமும் நடைபெறவில்லை.
இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு சென்ற ரயில்வே ஊழியர்கள், தண்டவாளத்தில் கிடந்த கல்லை அகற்றினர். இதை அடுத்து தண்டவாளத்தில் கல்லை வைத்த மர்மநபர்கள் குறித்து எழும்பூர் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments