Tamil Sanjikai

பிரேசிலில் தனது நண்பரைத் துப்பாக்கியால் சுட்டவனை, தனது உயிரை பற்றி சிறிதும் கவலைப்படாமல், உயிரைப் பணயம் வைத்து பிடித்தவர் பற்றி வீடியோ வெளியாகி உள்ளது.

தலைநகர் பிரேசிலியாவில் உள்ள உணவகம் ஒன்றில் லாகோவா நோவா ((Lagoa Nova)) என்ற தொழிலதிபரும் அவரது நண்பர்களும் உணவருந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் நோவாவைச் சுட்டதில் அவர் படுகாயமடைந்தார். இதை சற்றும் எதிர்பாராத நோவாவின் நண்பர் துப்பாக்கி வைத்திருந்த நபரை பாய்ந்து சென்று பிடித்து கட்டிப்புரண்டு சண்டையிட்டார்.

இதில் துப்பாக்கி வைத்திருந்தவர் மீண்டும் சுடுவதற்கு முயற்சி செய்யும் முன் அந்த நபரை அடித்து துவம்சம் செய்தார் நோவாவின் நண்பர்.

இறுதியில் மற்றொருவர் உதவிக்கு வரவே, துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

0 Comments

Write A Comment