Tamil Sanjikai

சாரதா நிதிநிறுவன முறைகேடு தொடர்பான வழக்கில் கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ்குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் நாளை ஷில்லாங்கில் விசாரணை நடத்த உள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காவல்துறை ஆணையரிடம் சாரதா வழக்கு தொடர்பான சிபிஐயின் விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 1989ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றவரான ராஜீவ்குமார், பலகோடி ரூபாய் மோசடி வழக்கை விசாரித்து வந்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.

இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட பின்னர், டெல்லி, போபால், லக்னோ உள்ளிட்ட இடங்களில் இருந்து பத்து உயர் அதிகாரிகளை சிபிஐ கொல்கத்தாவுக்கு மாற்றியுள்ளது. இவ்வழக்கில் சந்தேகத்திற்குரிய பலமுக்கியப் பிரமுகர்களிடம் விசாரணை நடத்த இக்குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் முக்கியமான நபராக உள்ள கொல்கத்தா காவல் ஆணையரிடம் முதல்கட்ட விசாரணை நாளை தொடங்குகிறது.

0 Comments

Write A Comment