Tamil Sanjikai

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ‘தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ இந்த படம் இன்று திரையிடப்பட உள்ள நிலையில், படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில், குடும்ப நாடகத்தில் மன்மோகன் சிங் பலிகடா ஆகிவிட்டதாக ஒரு வசனம் இடம்பெற்றுள்ளது. இதேபோல், அணுசக்தி ஒப்பந்தம், காஷ்மீர் பிரச்னை, ராகுல்காந்தியை பிரதமராக்குவது போன்ற விஷயங்களில் காங்கிரஸ் கட்சி எடுத்த நிலைப்பாடு குறித்து பகிரங்கமாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் விஜய் குட்டே இயக்கத்தில் சுனில் போரா மற்றும் தவல் கடா தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்த படத்தில், மன்மோகன் சிங் கதாப்பாத்திரத்தில் அனுபம் கேர் நடித்துள்ளார். இப்படத்தில் நடித்திருப்பதற்காக பலர் அவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

0 Comments

Write A Comment