காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான 86 வயதான மன்மோகன் சிங், கடந்த, 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி.,யாக பதவி வகித்து வந்தார். சமீபத்தில் அவரது பதவிக் காலம் முடிவடைந்தது.
இதையடுத்து, மீண்டும் அவரை எம்.பி.,யாக தேர்வு செய்ய காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து அவரை எம்.பியாக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஜெய்பூரில் மன்மோகன் சிங் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
0 Comments