ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, ஈரானுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது, அதுமட்டுமில்லாமல், ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது.
ஈரானும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என்று பதிலடி கொடுத்து வருகிறது. சமீபத்தில் ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஈரானே காரணம் என்று அமெரிக்காவும், ஈரான் அமெரிக்கா மீதும் பரஸ்பரம் குற்றம் சாட்டின.
இந்த நிலையில், ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஹோர்மஸ்கான் என்ற பிராந்திய பகுதிக்குள் வந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், உடனடியாக பதில் எதுவும் கூற முடியாது என்று அமெரிக்க ராணுவம் கருத்து கூற மறுத்து விட்டது.
0 Comments