தோஹா ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து, ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம், பாட்டியாலாவில் நடந்த தடகளப் போட்டியின்போது, அவரிடத்தில் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை பரிசோதனை நடத்தியது. அதில், அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
முறைப்படி, எங்களுக்கு தகவல் எதுவும் அளிக்கப்படவில்லை. ஊக்கமருந்து சோதனை முடிவை தாமதமின்றி அறிவித்திருந்தால், நாங்கள் அவரை ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்க அனுமதித்திருக்க மாட்டோம் என்று இந்திய தடகள சம்மேளன அதிகாரி தெரிவித்துள்ளார்.
கோமதி ஊக்க மருந்து பயன்படுத்தியது தொடர்பாகத் தடகள சம்மேளனம் அவருக்கு இ-மெயில் அனுப்பியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. தற்போது, அவர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி நிறுனம் தெரிவித்துள்ளது.
அடுத்தபடியாக, 'பி' மாதிரியும் பரிசோதிக்கப்படும். இந்தச் சோதனை முடிவைப் பொறுத்தே முடிவுகள் எடுக்கப்படும். கோமதி ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதிப்படுத்தப்பட்டால், ஆசிய தடகளத்தில் அவர் வென்ற தங்கம் பறிக்கப்படும். தற்போது, 30 வயதான அவர், 4 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க முடியாது.
0 Comments