Tamil Sanjikai

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் சிக்கியுள்ள கார்த்தி சிதம்பரம், பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

2006ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், விதிமுறைகளை மீறி ஏர்செல் நிறுவனத்தில் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்தது. இதில் கார்த்தி சிதம்பரம் நடத்திவந்த நிறுவனம் மேக்சிஸ் நிறுவனத்திற்கு உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில், அமலாக்கத் துறையும், சி.பி.ஐ.யும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்துள்ளன.

இந்நிலையில், பிப்ரவரி மாதம் முதல் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்ல வேண்டியிருப்பதாகவும், அதற்கு அனுமதி தரக் கோரியும் கார்த்தி சிதம்பரம் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அடுத்த மாதம் கார்த்தி சிதம்பரம், பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல அனுமதி வழங்கியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை, கார்த்தியிடம் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவித்தது.

இதையடுத்து, விசாரணை நடத்தவுள்ள தேதிகளை வரும் 30ஆம் தேதி தெரிவிக்குமாறு, அமலாக்கத்துறைக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 Comments

Write A Comment