Tamil Sanjikai

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரிட்டன் நிறுவனத்தில் பங்குதாரராக இருப்பதாகவும், அந்நிறுவனம் தொடர்பான ஆவணங்களில் தன்னை இங்கிலாந்து குடிமகன் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளதாகவும் அண்மையில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி பிரச்சினையை கிளப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இப்புகார் தொடர்பாக, விளக்கம் கேட்டு உள்துறை அமைச்சகம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கிடையே, இரட்டைக் குடியுரிமை வைத்துள்ளதாக ராகுல் காந்தியே குறிப்பிட்டுள்ளதாகவும் இதனால், ராகுல் காந்தி மக்களவை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

0 Comments

Write A Comment