குடிசை மாற்று வாரிய வீடு வாங்கி தருவதாக கூறி பல பெண்களிடம், 1 கோடியே 25 லட்சம் ரூபாய் வசூலித்து மோசடி செய்த சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிவகாமி என்ற அந்தப் பெண் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழு பெண்களிடம் பணம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் பணம் கொடுத்து பல நாட்கள் ஆகியும் வீடுகள் கிடைக்காத நிலையில், அதுகுறித்துக் கேட்டபோதெல்லாம் படப்பையைச் சேர்ந்த சாமுவேல் என்பவரிடம் பணத்தை கொடுத்திருப்பதாக சிவகாமி கூறியதாக பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் ஏராளமான பெண்கள் சேர்ந்து சிவகாமியை சிறைப்பிடித்து திருவான்மியூருக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து தனது மனைவி கடத்தப்பட்டதாக சிவகாமியின் கணவர் அளித்த புகாரின் பேரில், அந்தப் பெண்களையும் சிவகாமியையும் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
அப்போது தங்கள் பணத்தை பெற்றுத்தர வலியுறுத்தி பெண்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து சிவகாமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments