தமிழகத்தில் ஒருசில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும், கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிடக்கூடிய அளவில் மழை எதுவும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியசுமாக வெப்பநிலை பதிவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments