நடந்துவரும் ஐ சி சி உலகக்கோப்பை கிரிக்கெட் ஒருநாள் சர்வதேச போட்டிகளில், பல்வேறு கிரிக்கெட் அணிகளின் வீரர்கள் அணியும் ஆடையின் நிறம் ஒன்றாக இருப்பதால், அணிகளை எளிதாக அடையாளம் கண்டுகொள்ளவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சியை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிட்டுள்ளது.
முன்புறம் கருநீலமும், பின்புறம் ஆரஞ்ச் நிறமும் கொண்ட இப்புதிய ஜெர்சியை, இங்கிலாந்து அணிக்கு எதிராக நாளை மறுநாள் (ஜூன் 30) நடைபெறவுள்ள, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள் அணிந்து விளையாட உள்ளனர். புதிய ஜெர்சியில் ஆரஞ்ச் நிறம் இருப்பதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அதனை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் உள்ளிட்ட ஐசிசி நடத்தும் போட்டிகளில் பங்கேற்கும் இரு அணிகளின் வீரர்கள் அணிந்திருக்கும் உடைகளின் நிறம் ஏறக்குறைய ஒன்றாக இருக்கும்பட்சத்தில், அணி வீரர்களை அடையாளம் காண்பதில் ரசிகர்களுக்கு பல சிக்கல்கள் ஏற்பட்டு வருaம் நிலையில், ஐசிசி போட்டிகளில் பங்கேற்கும் அணிகளின் வீரர்களுக்கு மாற்று உடைகளை ஐசிசி தற்போது ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments