Tamil Sanjikai

சர்தார் படேல் உருவச்சிலை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்றும் அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின், 143வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறதுது. இந்த நாளில் சரடர் பட்டேல் நம் நாட்டிற்காக செய்த தியாகங்களை போற்றும் வகையில் குஜராத் மாநிலத்தில் கட்டமைக்கப்பட்ட அவரின் உருவச்சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

குஜராத் மாநிலம் கேவாடியா பகுதியில், நர்மதை நதிக்கரையின் ஓரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த சிலைஉலகின் மிக உயரமான சிலையாகும். இந்த சிலையின் உயரம் சுமார் 189 மீட்டராகும், அதாவது 597 அடி உயரம். இந்த சிலையை வடிவமைக்க சுமார் ரூ. 2,989 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சிலையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு, நாடு முழுவதும் மக்கள் தேசிய ஒற்றுமை தினத்தைக் கொண்டாடி வருகின்ற இந்நாளில் சர்தார் படேலின் சிலையை நாட்டு மக்களுக்கு வழங்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததை மிகவும் அதிர்ஷ்டவசமாக கருதுவதாக கூறினார், மேலும் இந்த நாள் இந்தியாவின் வரலாற்றில் நினைவுகொள்ளப்பட வேண்டிய ஒரு நாள் என்றும், இந்த நாளை யாரும் மறக்க மாட்டார்கள் என்றும் கூறினார்.

0 Comments

Write A Comment