ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.
டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த நிலையில், அம்மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, ரிஷிகேஷ் ராய் அமர்வு இன்று விசாரிக்கிறது.
முன்னதாக, ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில், ப.சிதம்பரத்தின் காவலை அக்டோபர் 17ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.மேலும், திகார் சிறையில் இருக்கும் சிதம்பரத்திற்கு வீட்டு உணவை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
0 Comments