Tamil Sanjikai

உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன்களில் விளையாடக்கூடிய பப்ஜி என்ற ஆன்லைன் விளையாட்டு கடந்த ஒரு சில ஆண்டுகளாக மக்களிடையே பிரபலம் அடைந்து உள்ளது. பலரும் இந்த விளையாட்டை விளையாடும் பலரும் இதற்கு அடிமையாக உள்ளனர். இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் வினோத சம்பவம் ஓன்று நடைபெற்றுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அஜ்மான் நகரின் காவல்துறையில் 20 வயதைக் கடந்த பெண் ஒரு புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், ‘தனது கணவர், பப்ஜி விளையாட்டை விளையாடுவதற்கு தனக்கு அனுமதி மறுக்கிறார். அதனால், தனது கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும்.

எனக்கான பொழுதுபோக்கை தீர்மானிப்பதற்கு எனக்கு உரிமை உள்ளது. நான், அளவுடன்தான் பப்ஜி விளையாட்டு விளையாடுகிறேன். எனக்கு, போனில் சேட் செய்வது பிடிக்காது. என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நான் இந்த விளையாட்டை விளையாடுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த காவல்துறை அதிகாரி, ‘அந்தப் பெண் விளையாட்டில் அடிமையாகிவிடக் கூடாது என்று எண்ணி அவரின் கணவன் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதுதான் இவர்களுக்கிடையேயான பிரச்சினைக்கு காரணம்’ என்று தெரிவித்துள்ளனர்.

0 Comments

Write A Comment