தமிழகத்தில் பால் விலையை உயர்த்த உள்ளதாக தனியார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் பால் விற்பனையில் அரசின் ஆவின் நிறுவனத்துடன் ஹட்சன், ஹெரிட்டேஜ், டோட்லா, ஜெசி, திருமலா ஆகிய நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் ஆரோக்யா, ஹெரிட்டேஜ் பால் விலை ஜுன் 1-ந்தேதி முதல் லிட்டருக்கு 2 ரூபாய் உயருகிறது. கொள்முதல் விலையை காரணம் காட்டி விலை உயர்த்தப்படுவதாக பால் முகவர்களுக்கு அந்நிறுவனங்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளன.
இதன்படி ஆரோக்கியா புல்கிரீம் லிட்டர் பால் 54 ரூபாயில் இருந்து 56 ரூபாயாகவும், சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ஒன்றுக்கு 42 ரூபாயில் இருந்து 44 ரூபாயாகவும் உயர்த்தப்பட உள்ளது.
ஹெரிட்டேஜ் நிலைப்படுத்தப்பட்ட பால் 48 ரூபாயில் இருந்து 50 ரூபாயாகவும், கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் 52 ரூபாயில் இருந்து 54 ரூபாயாகவும் உயருகிறது.
0 Comments