Tamil Sanjikai

மகாராஷ்டிரா மாநிலத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வினை மாநில கல்வி வாரியம் நடத்தி வருகிறது. இதில் மாணவர்களுக்கான தோ்வு நுழைவு சீட்டை (ஹால்டிக்கெட்) ஒவொரு வருடமும் கல்வி வாரியம் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்து வந்தது.

இந்தநிலையில் நடப்பாண்டு முதல் பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களுக்கான தேர்வு நுழைவு சீட்டை இணையதளத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கல்வி வாரியம் அறிவித்து உள்ளது. இதன்மூலம் இனிமேல் மாணவர்கள் தங்கள் தேர்வு நுழைவு சீட்டு தொலைந்து போனாலும் அதற்கான நகலை பள்ளி நிர்வாகத்திடமே இலவசமாக பெற்று கொள்ள முடியும் என மும்பை மண்டல கல்வி வாரிய தலைவர் சரத் கன்டகலே கூறினார்..

0 Comments

Write A Comment