Tamil Sanjikai

கடந்த 1996-ம் ஆண்டு இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து வெளியான படம்‘இந்தியன்’. லஞ்சம், ஊழலுக்கு எதிரான கருத்தியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் தாத்தா கதாபாத்திரம் அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தின் 2-ம் பாகத்தை தற்போது இயக்குநர் சங்கர் இயக்கி வருகிறார். இந்தப் படத்திலும் கமல்ஹாசன்
தான் கதாநாயகனாக நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார். லைகா நிறுவனத்துடன் பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். படத்துக்கான செட் அமைக்கும் பணிகள் கடந்த நவம்பர் 12-ம் தேதி துவங்கியது.

இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 18-ம் தேதி பொள்ளாச்சியில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதைத் தொடர்ந்து படப்பிடிப்பை உக்ரைனில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் 2020-ம் ஆண்டில் படத்தை திரைக்கு வருமென தெரிகிறது.

0 Comments

Write A Comment