இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 39-வது தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றுகொண்டார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக விஜயநகரம் மகாராஜாவுக்குப் பிறகு இரண்டாவதாக தேர்ந்து எடுக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் கங்குலி ஆவார்.
தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளராக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனும், குஜராத் மாநில கிரிக்கெட் சங்க தலைவருமான ஜெய்ஷாவும், பொருளாளராக மத்திய மந்திரி அனுராக் தாகூரின் தம்பியும், இமாச்சலபிரதேச கிரிக்கெட் சங்க தலைவருமான அருண் துமாலும், இணைசெயலாளராக கேரள கிரிக்கெட் சங்க தலைவர் ஜெயேஷ் ஜார்ஜும், துணை தலைவராக மஹிம் வர்மாவும் பொறுப்பேற்று கொண்டனர்.
0 Comments