மக்களவை தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு பண விநியோகத்தை தடுக்கும் வகையில்,பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இரவும் பகலுமாக வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சேலத்தில் நேற்றிரவு குகையை அடுத்துள்ள திருச்சி பிரதான சாலையில் தெற்கு தொகுதி பறக்கும் படை அதிகாரி ஆனந்த் யுவனேஷ் தலைமையில் வாகன தணிக்கை நடைபெற்றது.. அப்போது, வேகமாக சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்ட முயன்ற போது, காரில் இருந்த நடிகை நமீதா காரை சோதனையிட ஒத்துழைக்க மறுத்து, அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அவருடன் இருந்த அவரது கணவரும், வழக்கறிஞரும் காரை சோதனையிட கூடாது என அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் இது வழக்கமான சோதனைதான் என எடுத்துக் கூறியும், அதனை ஏற்க மறுத்த நமீதா, பெண் காவலர்கள் தான் தங்கள் வாகனத்தை சோதனையிட வேண்டும் என கூறினார். இதையடுத்து பெண் காவலர்களை வரவழைத்து வாகனத்தை சோதனை செய்தனர். வாகன சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளை, நமீதாவுடன் வந்தவர்கள் மிரட்டும் தொனியில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
0 Comments