இங்கிலாந்தில் உள்ள டாடா ஸ்டீல் ஒர்க்ஸ் ((TaTa Steel Works)) தொழிற்சாலையில் பயங்கர சப்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தால்போட் ((Talbot)) என்ற துறைமுக நகரில், டாடா நிறுவனத்தின், இரும்பு உருக்காலையான டாடா ஸ்டீல்ஒர்க்ஸ் அமைந்துள்ளது . இங்கு, இன்று அதிகாலை 3.35 மணிக்கு பயங்கர சப்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது .
இந்த வெடிவிபத்தை உறுதி செய்திருக்கும் சவுத் வேல்ஸ் ((South Wales)) காவல்துறையினர், இரண்டு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக, கூறியிருக்கின்றனர்.
மேலும், வெடிவிபத்தைத் தொடர்ந்து இரும்பு உருக்கு ஆலையில் தீ பிடித்ததாகவும், தீயணைப்பு மற்றும் அவசரகால மீட்பு படையினர் அங்கு விரைந்ததாகவும், சவுத் வேல்ஸ் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
இதற்கிடையே, முதல் வெடிவிபத்து நேரிட்ட பின்னர், அடுத்தடுத்து இரண்டு வெடிவிபத்துகள் நடைபெற்றதாக, பொதுமக்கள் அளித்த தகவலை மேற்கோள்காட்டி, தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.
சம்பவத்தை உறுதி செய்திருக்கும் டாடா ஸ்டீல் நிறுவனம், வெடிவிபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ, கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், பெரியளவில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனக் கூறியிருக்கிறது.
0 Comments