வேலூரில், ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள வேலூர் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவானது வருகின்ற ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ஜூலை மாதம் 11 ஆம் தேதி தொடங்கி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் அதற்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுக்கொண்டிருந்த சூழலில் இன்று மதியம் மூன்று மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்திருக்கிறது.
இதுவரை 50 வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருக்கிறார்கள். இந்த வேட்பு,மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெற உள்ளது. தற்போது திமுக சார்பில் கதிர் ஆனந்த் அவர்களும், அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சியின் தலைவர் திரு ஏ சி சண்முகமும் அவர்களும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் வாணியம்பாடியை சேர்ந்த தீபாலக்ஷ்மி அவர்களும் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள். இந்த தேர்தலில் அ.ம.மு.க.மற்றும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை.
0 Comments