அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்த பின்னர் வெற்றிவேல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “அதிமுக விலுள்ள எங்கள் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்தாலும் நீதிமன்றம் செல்லாமல்; தேர்தலை சந்திப்போம். எங்களது ஸ்லீப்பர் செல்கள் இன்னும் அதிமுகவில் உள்ளனர். சிலர் அமைச்சர்களாகவும் உள்ளனர்” என்றார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக, அ.தி.மு.க.வைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அ.பிரபு, விருத்தாச்சலம் எம்.எல்.ஏ. வி.டி.கலைச்செல்வன், அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி ஆகிய 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்து சபாநாயகரிடம் அதிமுக கொறடா ராஜேந்திரன் நேற்று புகார் மனுவை அளித்தார்.
0 Comments