Tamil Sanjikai

சட்டவிதிகளை மீறிய ‘கூகுள்’ நிறுவனத்துக்கு ரஷ்யா அரசு 54 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

அந்நாட்டில் ‘கூகுள்’ உள்ளிட்ட தேடுபொறிகளில், சட்டவிரோத தகவல்களை கொண்ட தளங்கள் இடம் பெறக்கூடாது என கடந்த ஆண்டு புதிய சட்டம் ஓன்று இயற்றப்பட்டது.

ஆனால் ‘கூகுள்’ நிறுவனம் இந்த சட்டத்தை பின்பற்றவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. தடை செய்யப்பட்ட தளங்கள் அந்த தேடுபொறியில் தொடர்ந்து இடம் பெற்று கொண்டு தான் இருந்தது.

இதையடுத்து சட்ட விதிகளை மீறிய குற்றத்துக்காக ‘கூகுள்’ நிறுவனத்துக்கு இந்திய மதிப்பில் 54 லட்சத்து 21 ஆயிரத்து 80 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த அபராத தொகையை ‘கூகுள்’ நிறுவனம் செலுத்தி விட்டதாக ரஷிய தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

0 Comments

Write A Comment