Tamil Sanjikai

பாகிஸ்தானில் மனித உரிமை மீறல் இன்னும் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது எனக் கூறியுள்ளார் பாகிஸ்தானை சேர்ந்த குலாலாய் இஸ்மாயில்.

பாகிஸ்தான் நாட்டில் உள்ள பெண்கள், அந்நாட்டு இராணுவத்தினால் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்த படுவதாகவும், முகநூல் மற்றும் ட்விட்டரில் தகாத வார்த்தைகளினால் திட்டப்படுவதாகவும் கூறி பெண் ஆர்வலரான குலாலாய் இஸ்மாயில் தனது சமூக வளைதளங்களில் குறிப்பிட்டதை தொடர்ந்து, தவறான செய்திகள் பரப்ப முயல்வதாகவும், சொந்த நாட்டிற்கு எதிராக செயல் படுவதாகவும் கூறி பாகிஸ்தான் அரசு அவரை கைது செய்ய உத்தரவிட்டது.

போலீசாரிடமிருந்து தப்பிய இஸ்மாயில், அமெரிக்காவில் உள்ள அவரது சகோதரி வீட்டில் தற்போது
தங்கியுள்ளார். இஸ்மாயிலின் கைதை பாகிஸ்தான் நீதிமன்றம் ரத்து செய்த போதிலும், இஸ்லாமாபாத் புலனாய்வு மையத்தின் கோரிக்கையை ஏற்று, அவரின் பாஸ்போர்ட் தடை செய்யபட்டுள்ளது.

இது குறித்து நியூயார்க் நகரின் செனட்டர் சார்லஸ் ஸ்கூம்மர் கூறுகையில், "இஸ்மாயில்மீண்டும் பாகிஸ்தான் திரும்பினால் அது அவருக்கு ஆபத்தாக முடிய வாய்ப்புள்ளது. என்னால் முடிந்த எல்லா உதவிகளையும் இஸ்மாயிலுக்கு செய்ய நான் தயாராக இருக்கிறேன்" எனக் கூறினார்.

பாகிஸ்தானில் மதத்தின் பேரில் இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறையை கண்டித்து, கராச்சி நகரில் கடந்த செப் 18., முதல் மக்கள் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

இந்த மாத இறுதியில் ஐக்கிய நாடுகளின் பொது சபை கூட்டம் நடக்கவுள்ள நிலையில், இப்போது அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கும் அனைத்தும் பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.

0 Comments

Write A Comment