Tamil Sanjikai

பார்வையாளர்களுக்கான டிக்கெட்டுகளை மின்னணு முறையில் (இ -டிக்கெட்) வழங்கும் நடைமுறையை, அனைத்துவித திரையரங்குகளிலும் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், டெல்லியில் அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 35 -ஆவது கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பை தடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இம்முடிவு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து அமல்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

இதுவரை, சென்னை போன்ற மாநகரங்களில், மல்டிபிளக்ஸ் எனப்படும் பெருவணிக வளாகங்களில் அமைந்துள்ள திரையரங்குகள் பெரும்பாலானவற்றில் மட்டுமே தற்போது இ-டிக்கெட் வழங்குவது நடைமுறையில் உள்ளது.

இதைதவிர, இரண்டாம் நிலை நகரங்கள், சிறுநகரங்களில் உள்ள திரையரங்குகளில், முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, பால்கனி என திரையரங்குக்குள் பார்வையாளர்கள் அமரும் இடங்களுக்கேற்ப, கட்டணத்தை பொருத்து, தியேட்டர் கவுன்ட்டர்களில் தான் பல வண்ணங்களில் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

0 Comments

Write A Comment