எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.
எவரெஸ்ட் சிகரத்தில் உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் ஏறி வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரு தினங்களில் மட்டும் இந்தியாவை சேர்ந்த 3 மலையேற்ற வீரர்கள் எவெரஸ்ட் சிகரத்தில் ஏறும்போது உயிரிழந்தனர்.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் 2 பேர், புதன்கிழமையன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர். இந்நிலையில், எவரெஸ்ட் சிகரத்தின் 8,485 மீட்டர் உயரத்தில் ஏறிக் கொண்டிருந்த நாராயண் சிங் என்பவர் வியாழன் அன்று தவறி விழுந்து உயிரிழந்தார்.
0 Comments