ஆஸ்திரேலியா, குயின்ஸ்லேண்டில் எடுக்கப்படட சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் மிக வேகமாக பரவி வைரலாகி வருகிறது. புகைப்படகலைஞர் ஒருவரால் எடுக்கபட்ட இந்த புகைப்படங்களில், ஆலிவ் மலைப்பாம்பு ஓன்று, ஒரு ஆஸ்திரேலிய நன்னீர் முதலையை முழுவதுமாக விழுங்கும் காட்சி இடம் பிடித்துள்ளது.
மிகவும் அச்சுறுத்தலை உண்டாக்கக்கூடிய இந்த வகை மலை பாம்புகள் மான், முதலை ஏன் மனிதரை கூட கொன்று முழுமையாக விழுங்கும் மிக பயங்கர திறன் கொண்டவை.
இதில் மலைபாம்பு, முதலையை சுற்றி வளைத்து தனது வாயை மிக அகலமாக திறந்து விழுங்கும் புகைப்படங்கள் இடம் பிடித்துள்ளன. இதுவரை பெரும்பாலான இணைய வாசிகளால் இந்த புகைபடங்கள் பார்க்கப்பட்டுள்ளது.
0 Comments