Tamil Sanjikai

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பல்சர் 150 கிளாசிக் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூபாய் 65,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்சர் 150 கிளாசிக் எடிஷன் பிளாக், பிளாக் மற்றும் ரெட் ஹைலைட்கள், பிளாக் மற்றும் சில்வர் ஹைலைட்கள் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. பஜாஜ் பல்சர் 150 கிளாசிக் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் 2018 பல்சர் 150 என கருதப்பட்டது, எனினும் புதிய மாடல்களில் தற்போதைய பல்சர் 150 மாடலில் இல்லாத சில அம்சங்கள் இடம்பெற்று இருக்கிறது.

புதிய பல்சரின் ஹெட்லேம்ப்பின் மேல், வீல்கள், ஃபாக்ஸ் ஏர் வென்ட்கள் மற்றும் பக்கவாட்டுகளில் ரெட் அல்லது சில்வர் நிற அக்சென்ட்களை கொண்டுள்ளது. இதேபோன்று பல்சர் லோகோ மற்றும் 150 பிரான்டிங் இம்முறை ரெட் அல்லது சில்வர் நிறம் கொண்டிருக்கிறது. சீட்களில் ஸ்டிட்ச் கூட பயனர் தேர்வு செய்யும் மாடலின் நிறத்திற்கு ஏற்றதாக வழங்கப்படுகிறது. ஒற்றை சீட் அமைப்பு, டிரம் பிரேக், டேன்க் எக்ஸ்டென்ஷன்கள் மற்றும் பாடி கிராஃபிக்ஸ் உள்ளிட்டவை இடம்பெறவில்லை. பல்சர் 150 கிளாசிக் எடிஷன் 2006-ஆம் ஆண்டு அறிமுகமான இரண்டாம் தலைமுறை பஜாஜ் பல்சர் மாடலை நினைவூட்டும் வகையில் காட்சியளிக்கிறது. இதன் வடிவமைப்பும் முந்தைய மாடலைப் போன்றே காட்சியளிக்கிறது. ஆனாலும் இதன் என்ஜின் அம்சங்கள் பி.எஸ். IVரக 2018 பஜாஜ் பல்சர் 150 மாடலில் உள்ளதைப் போன்றே வழங்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய பல்சரில் 149சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சம் 14 பி.ஹெச்.பி. பவர், 13.4 என்.எம். டார்கியூ மற்ரும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

பல்சரின் பின்புறம் ட்வின் கேஸ்-சார்ஜ் செய்யப்பட்ட ஷாக் அப்சார்பர்களும், முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்களை கொண்டுள்ளது. இத்துடன் முன்பக்கம் 240எம்.எம். டிஸ்க் பிரேக், பின்புறம் 130எம்.எம். டிரம் பிரேக் கொண்டிருக்கிறது. பஜாஜ் பல்சர் 150 கிளாசிக் எடிஷன் புதிய நிறங்கள் அந்நிறுவன வலைதளத்தில் அப்டேட் செய்யப்படவில்லை, என்றாலும் இவை ஷோரூம்களில் கிடைக்கிறது.

0 Comments

Write A Comment