Tamil Sanjikai

பாகிஸ்தானில் சீக்கிய மத பிரதிநிதிகள் தங்களது சமூகத்தினருக்காக தனியாக பள்ளி ஒன்றை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதுபற்றி கைபர் பக்துன்குவா அரசு நிர்வாகம் வருடாந்திர பட்ஜெட் 2019-20ன் ஒரு பகுதியாக, சிறுபான்மை விவகார துறைக்கு ரூ.5.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதேபோன்று சிறுபான்மை சமூகத்தினரின் திருவிழாக்களை நடத்துவதற்காக ரூ.86 லட்சம் நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது.

இதன்படி அந்நாட்டின் பெஷாவர் நகரில் முதல் சீக்கிய பள்ளி அமைகிறது. இதற்கான கட்டிடம் கட்டும் பணிக்காக ரூ.22 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

0 Comments

Write A Comment