அனுமதி இல்லாமல் விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை உடனே மூட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நல்லசாமி நாச்சிமுத்து என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார், மனுவில், தங்கள் மாவட்டத்தில் விவசாய நிலத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்திருந்தார். டாஸ்மாக் கடை உள்ள இடத்துக்கு அருகே விவசாயம் நடைபெறுவதாகவும், இந்த இடம் வழியாக செல்லும் சாலையைதான் மாணவர்களும் பயன்படுத்துகின்றனர் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், வேறு ஒரு இடத்தில் செயல்பட்டு வந்த இந்த மதுபானக்கடையை திடீரென கடந்த டிசம்பர் மாதம் விவசாய நிலத்தில் அமைத்துள்ளதால் அதை அகற்ற உத்தரவிடுமாறு கோரியிருந்தார்.
0 Comments