ஜப்பான் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில், முதன்முறையாக விமானத்தில் குழந்தையுடன் பயணிப்பவர்களுக்கான இருக்கைகள் ஒதுக்கப்பட்டதுடன், அந்த தகவலை அறிய பிரத்யேக சின்னமும் காண்பிக்கப்படுகிறது.
பேருந்து முதல் விமானம் வரையில் குழந்தைக்குகளுடன் பயணிக்கும் பெற்றோர்களின் பாடு பெரும் படக்கத்தான் இருக்கிறது. இதனால் குழந்தையின் பெற்றோர்கள் மட்டுமல்லாது உடன் பயணிக்கும் மற்ற பயணிகளும் பல சிரமங்களுக்கு ஆளாக நேரிடுகிறது.
இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வாக ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் குழந்தைகளுடன் பயணிக்கும் பயணிகளுக்கான பிரத்யேக இருக்கைகளை ஒதுக்கியுள்ளது.
அதோடு விமான இருக்கைகளின் முன் பதிவிற்கான செயலியில் ஒதுக்கப்பட்ட இருக்கைகளை மற்ற பயணிகள் அறிந்துகொள்வதற்கு ஏதுவாக குழந்தை படத்துடனான சின்னத்தை குறியீடாக காட்டுகிறது. இந்த தகவலை விமானப் பயணி ஒருவர் பகிர்ந்துள்ளார்.
0 Comments