Tamil Sanjikai

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.

ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போது சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் இடியுடன் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கிண்டி, திருவான்மியூர், பெசன்ட் நகர், வடபழனி, கோடம்பாக்கம், மீனம்பாக்கம், தி. நகர், ராயப்பேட்டை, கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சில பகுதிகளில் கனமழையும், சில பகுதிகளில் லேசான மழையும் பெய்தது.

0 Comments

Write A Comment