டெல்லி மாநிலத்தின், சாந்தினி சவுக் தொகுதியின் எம்எல்ஏ அல்கா லம்பா ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டார். ஆம் ஆத்மி கட்சியில் கடந்த 6 வருட பயணம் முடிவுக்கு வருவதாகவும் அல்கா லம்பா அறித்து உள்ளார். கடந்த 6 வருட பயணம் எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக உள்ளது அனைவருக்கும் நன்றி, என கூறி உள்ளார்.
லம்பா கடந்த ஞாயிற்றுக்கிழமை சோனியா காந்தியை சந்தித்தார், இதனால் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே அவர் காங்கிரஸ் கட்சியில் சேரக்கூடும் என்ற ஊகத்திற்கு வழிவகுத்துள்ளது.
0 Comments