பெங்களூருவில் தாக்குதல் நடத்த வங்காளதேசத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.
இதன் தொடர்ச்சியாக பெங்களூரு நகரில் பயங்கரவாதிகள் ‘ஸ்லீப்பர்செல்‘ போன்று இருப்பதாக போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்தார். இதனால் பெங்களூருவுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பது பகிரங்கமானது.
இதன் தொடர்ச்சியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு விமான நிலையம், ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. போலீசாரும் ரோந்து வாகனத்தில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மேலும் வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு கல்வி கற்கவும், தொழில் ரீதியாகவும், சுற்றுலாவுக்காகவும் வந்த வெளிநாட்டினரிடம் தீவிர சோதனை நடத்த வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனர் சந்தீப் பாட்டீல் தலைமையிலான போலீசார் பெங்களூரு நகரில் வசித்து வரும் வெளிநாட்டினரின் வீடுகளில் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த சோதனையின்போது அவர்கள் எந்த நோக்கத்துக்காக பெங்களூரு வந்தனர். அவர்களிடம் விசா, பாஸ்போர்ட் உள்பட அனைத்து ஆவணங்களும் உள்ளதா? என்பதை சோதனை செய்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த சோதனையில் பெங்களூரு நகரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரியா, ஆப்பிரிக்கா நாடுகளை சேர்ந்த 7 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பெங்களூரு நகரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். பெங்களூரு ராமமூர்த்தி நகர், பெல்லந்தூர், மாரத்தஹள்ளி, கே.ஆர்.புரம், எச்.ஏ.எல். உள்பட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின்போது வெளிநாட்டினர் சட்டத்துக்கு உட்பட்டு உரிய ஆவணங்களுடன் தங்கியுள்ளனரா? என்பது பரிசீலனை செய்யப்பட்டது.
அப்போது 29 ஆண்கள், 31 பெண்கள் என மொத்தம் 60 பேர் உரிய ஆவணங்கள் இன்றி பெங்களூருவில் சட்டவிரோதமாக தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 60 பேரையும் போலீசார் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் கைதான 60 பேரும் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் எதற்காக பெங்களூருவில் சட்டவிரோதமாக தங்கினர்? அவர்களின் பின்புலம் என்ன? எவ்வளவு காலம் பெங்களூருவில் தங்கி உள்ளனர்? என்பது போன்ற முக்கிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். அத்துடன் கைதானவர்களில் சிலர் இந்தியாவுக்கான ஆதார் அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களையும், வங்கி கணக்குகளையும் வைத்திருந்தது தெரியவந்து உள்ளது. இதனால் போலி ஆதார் அட்டை உள்பட முக்கிய ஆவணங்கள் வாங்கியது எப்படி? உதவி செய்தது யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுதொடர்பாக நேற்று பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
“பெங்களூரு நகரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி சட்டவிரோதமாக தங்கியதாக வங்காளதேசத்தை சேர்ந்த 60 பேரை கைது செய்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக பணி செய்து வருகிறார்கள். பெங்களூரு மாநகராட்சியில் கூட சிலர் பணி செய்தனர்.
இவர்களை யார் இந்தியாவுக்கு அழைத்து வந்தனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். பெங்களூரு நகரில் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு வீடு வாடகைக்கு கொடுப்பவர்கள் உரிய ஆவணங்கள் உள்ளதா? என்பதை சரிபார்த்து வழங்க வேண்டும். இல்லாவிட்டால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக பெங்களூருவில் தங்க வீடு வழங்கும் வீட்டு உரிமையாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனால் வீடு வழங்குபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் கைதானவர்களை மீண்டும் அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்புவதற்கான நாடு க
0 Comments