Tamil Sanjikai

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், பயங்கரவாத இயக்கங்கள் முகாம்கள் அமைத்து செயல்பட்டு வருகின்றன. காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் நம் இந்திய வீரர்கள் 40 கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய விமானப்படையின் மிராஜ்-2000 விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.

12 போர் விமானங்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டன. இந்த அதிரடி தாக்குதலில், பலாகோட், சகோதி, முசாபர்பாத் ஆகிய இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதுடன், ஜெய்ஷ் இ முகம்மது இயக்க கட்டுப்பாட்டு அறையும் இந்த தாக்குதலில் சின்னாபின்னமானது. இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய போது பாகிஸ்தான் போர் விமானங்கள் அங்கு வந்துள்ளன.

ஆனால், இந்திய விமானப்படையின் பலத்தை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தானின் F-16 போர் விமானங்கள் திரும்பி ஓடியுள்ளன. இந்த தகவலை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிடுள்ளது.

 

0 Comments

Write A Comment