மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் தனியார் பள்ளி ஒன்றின் விடுதியில் பேபிசானா என்ற 8-ம் வகுப்பு மாணவி, கடந்த ஜூலை 18-ந்தேதி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், அம்மாணவியின் உடலில் காயங்கள் இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டதாக மாணவர் சங்கங்கள் போராட்டத்தில் குதித்தன.
இந்த மர்ம சாவு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, கூட்டு போராட்ட குழு 48 மணி நேர வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது. நேற்று காலை 6 மணிக்கு வேலைநிறுத்தம் தொடங்கியது. கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன. பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. முதல்-மந்திரி பிரேன் சிங்கின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. சாலை மறியல் நடந்தது. மொத்தத்தில், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
0 Comments