யூடியூபில் அதிக சந்தாதாரர்களைக் கொண்டிருப்பது யார்? என்ற உலகளாவிய போட்டியில் முதலிடத்தில் உள்ள ஸ்வீடனைச் சேர்ந்தவரின் பீயூ டி பை சேனலுக்கும், இந்தியர் ஒருவரின் டி சீரீஸ் சேனலுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஸ்வீடனைச் சேர்ந்த பெலிக்ஸ் ஜெல்பெர்க் என்பவரின் பியூ டி பை என்ற யூடியூப் சேனல் கடந்த 6 ஆண்டுகளாக சந்தாதாரர் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில் 1997-ல் நிழல் உலக தாதா தாவூத்தால் கொல்லப்பட்ட குல்ஷான் குமாரால் தொடங்கப்பட்ட டீ சீரிஸ் நிறுவனத்தை தற்போது அவரது மகன் பூஷன் குமார் தான் நிர்வகித்து வருகிறார். இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து டீ சீரீஸ் யூடியூபில் சந்தாதாரர்கள் அதிகரித்தனர்.
தற்போது, உலகளவில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இரு சேனல்களும் 8 கோடிக்கும் அதிகமான சந்ததாரர்களைக் கொண்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி பதினொன்றரை மணி நிலவரப்படி பியூ டி பையை முந்தி முதலிடம் என்ற மகுடம் சூட இந்திய நிறுவனமான டி சீரீஸ்-க்கு இன்னும் சுமார் ஒன்றரை லட்சம் சந்தாதாரர்களே உள்ளதால் கடும் போட்டி நிலவுகிறது.
0 Comments