பிரேசில் நாட்டில் உள்ள அமேஸோனாஸ் மாகாண சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரேசில் நாட்டின் வடக்குப்பகுதியில் உள்ள அமேஸோனாஸ் மாகாண சிறை உலகிலேயே அதிக கைதிகளைக் கொண்டது. அங்கு கைதிகளுக்கிடையே நேற்று முன்தினம் (26ஆம் தேதி) திடீரென மோதல் ஏற்பட்டது, மோதல் கலவரமாக மாறியது. இதனையடுத்து சிறைக்காவலர்கள் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும், இந்த மோதலில் 50க்கும் மேற்பட்ட கைதிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த சிறையில் கைதிகளுக்கு இடையே நிகழந்த மோதலில் 56 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments