Tamil Sanjikai

அமெரிக்காவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த எஃப் 16 ரக போர் விமானம் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள கட்டிடம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது.

தென் கலிபோர்னியாவில் இருக்கும் மார்ச் விமான தளத்தில் எஃப் 16 ரக போர் விமானத்தில், பைலட் ஒருவர் பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக விமானம் கிடங்கு கட்டிடம் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக , இந்தச் சம்பவத்தில், விமானி உயிர் தப்பினார். ஆனால் கிடங்கில் இருந்த 5 பேருக்கு இந்த விபத்தினால் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக ராணுவத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த விமானி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக, அரசு தரப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

0 Comments

Write A Comment