Tamil Sanjikai

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், நேரில் சென்று ஆறுதல் கூறி வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு 60 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களையும் வழங்கி வருகிறார். கடந்த 10 நாட்களாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்களையும் வழங்கி வருகிறார். இந்தநிலையில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் படிக்கும் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்ட மாணவர்களின் முழு கல்விக் கட்டணத்தையும் ரத்து செய்வதாகவும், அவர்கள் எந்த கட்டணமும் இன்றி தங்களின் படிப்பை தொடரலாம் எனவும் பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.

தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை4 மாவட்டங்களிலிருந்து 650 மாணவர்கள் படிப்பதாகவும், அவர்களுக்கான நான்காண்டு கல்விக் கட்டணம் சுமார் 48 கோடி ஆகும். கல்வி கட்டண ரத்து செய்யப்பட்டிருப்பதின் மூலம், மாணவர்களின் பெற்றோரின் சுமை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு ‘தானே’ புயலின் போதும் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த 350 மாணவர்களுக்கான ரூபாய் .7.5 கோடி கல்வி கட்டணத்தை பாரிவேந்தர் ரத்து செய்தார். பாரிவேந்தரின் இந்த அறிவிப்பை மக்களும், அரசியல் தலைவர்களும் பாராட்டி வருகின்றனர்.

0 Comments

Write A Comment