Tamil Sanjikai

டெல்லியில் இருந்து வாரணாசி வரை செல்லும் இந்தியாவின் அதிவேக ரெயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை நேற்று டெல்லியில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார். ரயிலின் முதல் ஓட்டத்தில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே வாரிய உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ரெயில் தொடக்க ஓட்டத்தில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று சாதனை புரிந்தது.

வாரணாசியில் இருந்து இந்த ரயில் திரும்பி வந்து கொண்டிருந்த போது பழுதாகி நின்றது. தனது முதல் பயணத்திலேயே ரயில் பழுதானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் பழுதாகி நிற்கும் ரயிலில், பயணித்த பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பயணிகள் பிற ரயில்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். ரயிலின் கட்டுப்பாடு இழந்ததாகவும், தொழில்நுட்ப கோளாறு தற்போதைக்கு சீரமைக்க முடியாததாக உள்ளது எனவும் ரயிலில் உள்ள பொறியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த ரயில், வர்த்தக ரீதியிலான பயணத்தை நாளை துவங்குகிறது.

0 Comments

Write A Comment